chkdsk.exe என்னும் பைலை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கில்(hard disk) ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைகளை அறியலாம். இது ஒரு DOS புரோகிராம் ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவில்(drive) அல்லது முழு டிஸ்க்கை இந்த
பைல் சோதனை செய்து பிரச்சினைகள் இருந்தால் அவற்றைச் சரி செய்திடும்.
எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறையேனும் இந்த பைலை இயக்கிப் பார்த்தல் நல்லது..
இதை பைலை இயக்க, ஸ்டார்ட் அழுத்தி கிடைக்கும் ரன் விண்டோவில் ‘command’ அல்லது ‘cmd’ என டைப்செய்து என்டர் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழ்காணும் கட்டளையை இயக்கவும்..
c:\>chkdsk e:
இது ஹார்ட் டிஸ்க்கின் 'e' டிரைவை சோதனை செய்யும்..
c:\>chkdsk e: /f /r
/f என்னும் கட்டளை டிஸ்க்கினை சோதனை செய்கையில் ஏதேனும் பிழைகளைக்கண்டால்; தானாகவே சரிசெய்துவிடும்..
/r என்னும் கட்டளை பழுதாகிப்போன மீண்டும் பயன்படுத்த முடியாத டிஸ்க்கிக் பகுதிகளை( Bad Sectors ) கண்டறிந்து அதிலுள்ள தகவல்களை மீட்டுத்தர முயற்சிக்கும்..
இந்த செக்டிஸ்க் கட்டளை கொடுத்தபின் கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவும்..பூட் ஆகும் போது செக்டிஸ்க் தானாக இயங்கி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட்டம் திரைக்கு வந்துவிடும்..
குறிப்பு
- இந்த பைலை இயக்க ஒரு கம்ப்யூட்டருக்குள் நீங்கள் அட்மினாக (admin)நுழைந்திருக்க வேண்டும்.
- ஹார்ட் டிஸக்கில் உள்ள தவறுகளை இந்த கட்டளை திருத்த வேண்டுமென்றால் நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த பைலையும் திறந்து வைத்திருக்கக் கூடாது..
இப்பத்தான் நான் சோதனை செய்து முடித்தேன் என்னுடைய டிஸ்க்கில் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..ம்ம்..அப்பாடி..
0 comments:
Post a Comment