
கணினியில் சில நேரங்களில் நம்முடைய பைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த பைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த பைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய பைல்கள் பழுதாக சில காரணங்கள் நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான பைல்களை அழித்து விடும், எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான பைல்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளை தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் பைல் பார்மட்கள்:
- Word documents (.doc, .docx, .docm, .rtf)
- Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
- Zip or RAR archives (.zip, .rar)
- Videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
- Images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
- PDF documents (.pdf)
- Access databases (.mdb, .mde, .accdb, .accde)
- PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
- Music (.mp3, .wav)
உபயோகிக்கும் முறை:
- முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- பின்பு அந்த மென்பொருளை ஓபன் செய்து அதில் கீழே குறிப்பிட்டு இருக்கும் பட்டனை அழுத்தி உங்களின் பழுதான பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

- பழுதான பைலை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Start Repair என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பைல் ரிப்பேர் ஆகா தொடங்கி சிறிது நேரத்திலேயே முழுதும் சரிசெய்யப்பட்டு உங்களுடைய பைல் திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த மென்பொருளால் குறிப்பிட்ட பைல்களை ரிப்பேர் செய்ய முடியாவிட்டாலும் கூட இந்த முகவரிக்கு repair@filerepair1.com உங்களின் பழுதான பைலை அனுப்பினால் அவர்கள் அந்த பைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள் என்பது இந்த மென்பொருளின் கூடுதல் சிறப்பு.
Download Link - File Repair
0 comments:
Post a Comment