Tuesday, November 12, 2013

கடவுசொல் இல்லாமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தலாம்!!

 ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம்.

அப்போது இன்னும் பலருக்கு கணக்கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு. இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை Access செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா?


இதை ஜிமெயில் மூலம் செய்ய முடியும். இதன் மிகப் பெரிய பலன் நீங்கள் Access கொடுக்கும் நபருக்கு உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரியாது. செட்டிங்க்ஸ் எதையும் மாற்ற இயலாது, சாட் செய்ய இயலாது. மாறாக அந்த கணக்கிற்கு வரும் மின்னஞ்சல்களை படிக்க முடியும், படித்ததை நீக்க முடியும். உங்கள் கணக்கில் இருந்து மின்னஞ்சல் அனுப்ப முடியும். இதை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும்.வரும் பகுதியில் “Accounts and Import” என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் “Grant access to your account” என்பதற்கு வரவும். அதில் “Add another account” என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகி மின்னஞ்சல் முகவரி கேட்கும். யாருக்கு Access தருகிறீர்களோ அவர் மின்னஞ்சல் முகவரி தந்து விடவும். அடுத்த பக்கத்தில் “Send Email to Grand Access” என்பதை கொடுத்து விடவும்.
இப்போது உங்கள் நண்பரிடம் சொல்லி அவருக்கு வந்துள்ள மின்னஞ்சலை Accept செய்ய சொல்ல வேண்டும்.

இதை கிளிக் செய்த அரை மணி நேரத்தில் Access வசதி கிடைத்து விடும். Access பெற்ற நபர், அவர் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் மூலையில் அவர் பெயர் மீது கிளிக் செய்தால் அதற்கு கீழே Access பெற்ற மின்னஞ்சல் கணக்குக்கு செல்வதற்கான வழி இருக்கும்.

இதில் இரண்டாவதாக மின்னஞ்சல் முகவரி உடன் Delegated என்று உள்ளது தான் Access கிடைத்துள்ள மின்னஞ்சல் முகவரி. இதை கிளிக் செய்தால் அவர் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து விடலாம். பாஸ்வேர்ட் தேவை இல்லை.

உங்கள் கணக்கில் இருந்து அவர் மின்னஞ்சல் அனுப்பும் போது, அதை பெறுபவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி உடன், அவரது மின்னஞ்சல் முவரியும் சேர்ந்து செல்லும்.

மேலே படத்தில் From, Sent By என்று இரு பகுதிகள் இருப்பதை காணலாம். இதன் மூலம் அவர் மின்னஞ்சல் கணக்கை தவறாக கையாள முடியாது.
இதில் ஜிமெயில் கணக்கு உள்ள இன்னொரு நண்பரை மட்டுமே சேர்க்க முடியும். யாஹூ, ஹாட்மெயில் மற்றும் இதர எதையும் பயன்படுத்தும் நண்பர்களையும் சேர்க்க முடியாது.


இப்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கில் “You have granted access to your account toxxxxxxx @gmail.com. This notice will end in 7 days.” என்று இருக்கும்.

0 comments:

Post a Comment

காப்பகம்