Tuesday, October 29, 2013

இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி!

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு.


இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும் எந்த கப்யூட்டர் கில்லாடியையும் உள்ளே விடாமல் தடுப்பது தான் இவற்றின் பணி.


ஆனால் இந்த சாப்ட்வேர்களின் கண்ணில் மண்ணை தூவிட்டு தளங்களுக்குள் நுழைந்துவிடும் கில்லாடிக்கு கில்லாடிகளும் இருக்கவே செய்கின்ற‌னர்.


கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிபுணர்களும் புதிய பாதுகாப்பு வழிகளை உருவாக்கி கொண்டே இருக்கின்றனர்.


பொதுவாக இத்தகைய சாப்ட்வேர்களும் பாதுகாப்பு வழிகளும் ஹைடெக்காக இருக்குமே தவிர சுவாரஸ்யமானதாக இருக்க வாய்ப்பில்லை.ஒரு பயர்வால் செயல்ப‌டும் விதம் பற்றி அறிய யாருக்கு ஆட்வம் இருக்கும் சொல்லுங்கள்.


 ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில் அறிமுகமாகியுள்ள பாதுகாப்பிற்கான புதிய சாப்ட்வேர் கொஞ்ச‌ம சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.அந்த சாப்ட்வேர் செயல்படும் விதம் அட என வியக்க வைத்து புன்னகைக்கவும் வைக்கிறது.


 பொதுவாக் எல்லா பாதுகாப்பு சாப்ட்வேர்களும் கம்ப்யூட்டர் கொள்ளையர்களை தடுத்து நிறுத்துவதில் கவன்ம் செலுத்துகின்றன என்றால் மைகோனோஸ் என்னும் இந்த புதிய சாப்ட்வேர் கம்ப்யூட்டர் திருடர்களையும் கொள்ளயர்களையும் உள்ளே அழைத்து அதன் பிறகு அவர்களுக்கு போக்கு காட்டி வெறுப்பேற்றி களைப்படைய வைத்து விட்டால் போதும் என புற முதுகிட்டு ஓட வைக்கிறது.


மற்ற சாப்ட்வேர்கள் பூட்டு போல செயல்ப‌டுகின்றன என்றால் இந்த சாப்ட்வேரோ இல்லாத ஒரு கதவை உருவாக்கி அதன் வழியே கம்ப்யூட்டர் திருடர்களை நுழைய வைத்து அவ‌ர்களுக்கு தவறான தகவல்களாக அள்ளிக்கொடுத்து குழப்பி விடுகிறது.


மைகோனோஸ் சாப்ட்வேர் இதனை செய்யும் விதம் கச்சிதமானது.ஒரு விழிபான காவலாளி போல இது திருடர்கள் யாரேனும் அத்துமீறி நுழைய முயல்கின்றனரா என்பதை சரியான நேரத்தில் கண்டு பிடித்து உஷாராகி விடுகிற‌து.


அனால் அதன் பிறகு அவசரப்படாமல் திருடனோடு மல்லுக்கட்ட தயாராகிறது.உடனே அது பொய்யான பாஸ்வேர்டுகளை எடுத்து சம‌ர்பிக்கிறது.மேலும் திருட்டு ஆசாமி தளத்திற்குள் முன்னேறி செல்வது போன்ற உண‌ர்வை ஏற்படுத்தி அங்கும் இங்கும் அல்லாட‌ அவைக்கிறது.
வழக்கமாக ஒரு மணியில் முடிய வேண்டிய வேலையை பல மணி நேரத்திற்கு இழுத்தடிக்கிறது.அதன் பிறகு பார்த்தால எல்லாம் போலியான தகவல்கள் என்ற உண்மை திருடனை வெறுப்பேற்றும்.


இப்படி திருட வந்த கில்லாடியின் உழைப்பை விரையமாக்கி இந்த சாப்ட்வேர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்.திருடனும் ஒரு கட்டத்தில் வெறுத்து போய் வேறு தளம் பார்க்க சென்று விடுவார்.அதற்குள் ஊடுருவ முயன்ற ஆசாமியின் அடையாளத்தை அறிய உதவக்கூடிய தகவல்களை இந்த சாப்ட்வேர் சேகரித்து விடும்.


கம்ப்யூட்டர் திருடர்களை தடுக்க எவ்வளவு தான் பாதுகாப்பான‌ வ‌ழியை உருவாக்கினாலும் அதனை உடைக்ககூடிய வழியை கண்டுபிடித்து விடும் நிலை இருப்பதால் இந்த புதுமையான சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் மைகோனோஸ் நிறுவன தலைவர் டேவிட் கோயர்ட்ஸ்.


இந்த சாப்ட்வேர் கப்ம்யூட்டர் திருடர்களின் முயற்சியை வீண‌டித்து அந்த செயலுக்கான பயனையே கேள்விக்குள்ளாக்கி விடுவதாகவும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் கூறுகிறார்.


சாப்ட்வேரும் கூட சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என்பதையும் அவர் சொல்லாமல் சொல்கிறார்.


0 comments:

Post a Comment

காப்பகம்