உலகில் அதிக அடிமைகளை வைத்திருப்பவர் மார்க் ஸுக்கர்பர்க் தான் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா? பேஸ்புக் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி.
மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம்.
நீங்கள் சாட் செய்யும் போது சாட் விண்டோவின் வலது கீழ் மூலையில் ஒரு ஸ்மைலி இருக்கும் அதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல Stickers உங்களுக்கு வரும்.
எதை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டுமோ அதன் மீது ஒரு கிளிக் செய்தால் போதும் அது உங்கள் நண்பருக்கு சென்று விடும். இதில் Free என்பதை கிளிக் செய்தால் குறிப்பிட்ட Sticker உங்கள் சாட்டில் சேர்ந்து விடும். அதன் பின் அவற்றை உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பலாம். தற்போது அனைத்து Sticker களும் இலவசமாக கிடைக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் போட்டு அடிமைகளின் எண்ணிக்கையை பெருக்க போறாங்களோ ஆண்டவா!!! இதோ அந்த ஸ்டிக்கர்ஸின் இமெஜ்கள்….

0 comments:
Post a Comment