Saturday, September 7, 2013

இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை!


 மத்தியில் மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்றும் விதத்தில் காங்கிரஸ் இலவச மொபைல் போன் மற்றும் இலவச கம்ப்யூட்டர் வழங்க பரிசீலனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக 10 ஆயிரம் கோடி செலவு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆட்சி்யை கைப்பற்ற முயற்சி:


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையி்ல் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும்நோக்கில் இலவச பொருட்களை விநியோகம் ‌செய்து வாக்காளர்களை கவரும் நடவடிக்கையி்ல் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் மத்தியில் பதவியேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையி்ல் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் மொத்த கடன் அளவான 50 ஆயிரம் கோடி‌யை தள்ளுபடி செய்தார். இதன் பயனாக மீண்டும் 2009-ம் ஆண்டில் அதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்கு கடன் தள்ளுபடி திட்டமும் ஒரு காரணியாக கூறப்பட்டது.
இலவச மொபைல் தி்ட்டம்:


தற்போதைய அரசின் பதவி காலம் வரும் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இருப்பினும் முன்னதாகவே தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நிலக்கரிசுரங்க ஊழல் வழக்கு என பல்வேறு பிரச்னைகள் காரணமாக மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்ற முடியுமா என்ற அச்ச நிலையி்ல் காங்கிரஸ் உள்ளது.
இதனையடுத்து மீண்டும் ஆட்சியை பி டிக்க அதிரடியாக ரூ 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச பொருட்கள் வழங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு ஒன்றிற்கு ரூ.360 மதிப்பு கொண்ட ரீசார்ஜ் உடன், 30 நிமிடம் டாக்டைம், 30 இலவச எஸ்.எம்.எஸ்., 30 நிமிடம் இண்டர் நெட் பயன்பாட்டுடன் கூடிய வகையில் இலவச மொபைல் போன்களை வழங்க முடி வு செய்துள்ளது. இதற்காக 4 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ( 2 ஆயிரத்து 983 கோடி ரூபாய் செலவி்ல் 60 சதவீத ஊரகப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஆயிரத்து 989 கோடி செலவி்ல் 40 சதவீத கிராம புற மாணவர்கள் பயன்படத்தக்க வகையி்ல) கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மீ்ண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் அரசு திட்டமிட்டு்ள்ளது. இத்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான சாத்தியக்கூறுகைளை மத்திய அமைச்சரவைக்குழு தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

காப்பகம்