Tuesday, May 28, 2013

உலகின் அதிக விலை கொண்ட பைக் மாடல்கள் - தொகுப்பு!!!








                 பொதுவாக சூப்பர் மற்றும் சொகுசு கார்கள் விலை கோடிகளை தாண்டும். ஆனால், சில மோட்டார்சைக்கிள்களும் கோடிகளை தாண்டிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தொழில்நுட்பம், திறன், வசதிகளை பொறுத்து கோடிகளை தாண்டும் உற்பத்தி நிலை மோட்டார்சைக்கிள்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 கான்ஃபெடரேட் பி-120 ரெய்த்:- 

                 

              பெர்ஃபார்மென்ஸுக்கு புகழ்பெற்ற கான்ஃபெடரேட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பைக் 127 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் எஞ்சினை கொண்டுள்ளது. விமானங்களை போன்று மிக உறுதியான சேஸியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஞ்சினுக்கு கீழே பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. டாம் குரூஸ், பிராட் பிட், ஜோர்டான் மன்னர் அப்துல்லா-2 போன்ற பிரபலங்களிடம் இந்த பைக் இருக்கிறது. விலை ரூ.74.12 லட்சம்.




ஈக்கோஸி டைட்டானியம்:-

                

             ஈக்கோஸி மோட்டோ ஒர்க்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக மோட்டார்சைக்கிள்தான் டைட்டானியம் வரிசையில் வெளியிடப்பட்ட டிஐ எக்ஸ்எக்ஸ். ரூ.1.64 கோடியில் விற்பனை செய்யப்படும் இந்த மோட்டார்சைக்கிள்தான் உலகின் அதிக விலை கொண்ட மோட்டார்சைக்கிளாக கருதப்படுகிறது



ஐகான் ஷீன்:-

                     

             ரேஸிங் உலகில் புகழ்பெற்ற ஐகான் நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்த ரேஸ் வீரர் பாரி ஷீனை கவுரவப்படுத்தும் விதத்தில் தயாரித்த பைக் மாடல்தான் இது. 253 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் சுஸுகியின் 1,400சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. விலை ரூ.94.39 லட்சம்.




எம்டிடி ஒய்2கே சூப்பர் பைக்:-

                

                இந்த பைக்கில் ஹெலிகாப்டர்களில் பொருத்தப்படும் ரோல்ஸ்ராய்ஸ் மாடல் 250 டர்போசாப்ட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் சாதாரண மாடலின் எஞ்சின் 324 பிஎஸ் பவரையும், ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலின் எஞ்சின் 426 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். மணிக்கு 365 கிமீ வேகத்தில் திறன் கொண்ட இந்த பைக்கின் விலை ஒரு கோடியை தாண்டுகிறது. கடந்த ஆண்டு இந்த பைக் மும்பை வந்திருந்தது நினைவிருக்கலாம்.

 
என்சிஆர் எம்16:-
               

            டுகாட்டி டெஸ்மோசெடிஸி ஆர்ஆர் பைக்கின் கஸ்டமைஸ்டு பைக் மாடல் இது. கார்பனை ஃபைபர் ஃபிரேம் கொண்ட இந்த பைக் வெறும் 144 கிலோ எடை மட்டுமே கொண்டது. செராமிக் மேட்ரிக்ஸ் காம்போஸிட் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த பைக்கின் எஞ்சின் 203 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ரூ.1.27 கோடி விலை கொண்டது

 

என்சிஆர் மேக்கியா நேரா:-
          
             
        கார்பன் ஃபைபர் மற்றும் டைட்டானியம் மோல்டிங்கில் உருவாக்கப்பட்ட பைக் இது. இதுவும் டுகாட்டி பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான். டுகாட்டி 998ஆர் டெஸ்ட்டாட்ரேட்டாவில் இருக்கும் 182 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தும் எஞ்சின்தான் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கிறது. 135 கிலோ எடை கொண்ட இந்த பைக்கின் விலை ரூ.1.23 கோடி

1 comments:

  1. ரேசில் ஓடும் பைக்குகள் விலை என்ன இருக்குங்க ..?

    ReplyDelete

காப்பகம்