Thursday, May 23, 2013

இசையின் பயன்கள் தெரியுமா உங்களுக்கு?






மத்தளம் - வாழ்வில் சுகம் உண்டாகும். 
பேரிகை - நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். 
தாளம் - கவலைகள் நீங்கும். 
சல்லரி - எண்ணங்கள் ஈடேறும். 
நரம்பு வாத்தியம் - நன்மைகள் கிடைக்கும்.
நாதஸ்வரம், புல்லாங்குழல் - புத்திரப் பேறு கிட்டும். 

தோல் வாத்தியக்கருவி - வெற்றி உண்டாகும். 
சங்கு முழக்கம்- பகை அழியும். 

பலிபீடம் ஏன்?
 

அனைத்துக் கோவில்களிலும் சுவாமிக்கு முன்புள்ள கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். இது எதற்காக என்று தெரியுமாப மாயையான உலகிலிருந்து விடுபட்டு கோவிலுக்குள் செல்லும் நம்மை பாவம், பிணி, பீடை மற்றும் துர்சக்திகள் தொற்றியிருக்கும். 
 

பலிபீடத்தின் அருகே செல்லும் போது அவற்றை பலி பீடங்கள் ஏற்றுக் கொண்டு, நம்மை முழுவதும் தூய்மைப்படுத்தி இறைவனை வழிபடச் செய்கின்றன. எனவே, கோவிலுக்குள் செல்லும் போது, முதலில் பலிபீடத்தை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். 
  

கோவிலில் தீபம் ஏற்றுங்கள்.......... 
 

கோவில்களில் எப்போதும் தீபங்கள் எரிந்து கொண்டே இருக்கும். இது, அறியாமை எனும் இருளில் மூழ்கியுள்ள உலகம், இறைவனின் துணையுடன் ஒளியுடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. 
 

கோவிலில் விளக்கு ஏற்றும் போது, அகம் மகிழும் தெய்வங்கள் மகிழ்ச்சி அடைந்து உலகை நல்வழிப்படுத்துவர் என்பது ஐதீகம். எனவே இறைவனின் அருளை எளிதில் பெற கோவிலில் தீபம் ஏற்றுங்கள். 


0 comments:

Post a Comment

காப்பகம்