Friday, May 17, 2013

Bio-Data தயாரிக்க அருமையான இணையதளம்






    திறமையை தினந்தோறும் வளர்த்துக்கொண்டு மேம்படுத்துகிறோம். வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு தெரிவிப்பது எப்படிஇவற்றைத் தெரிவிக்க அடிப்படையாக, ஒரு முகப்புப் பக்கத்தைபோல (Index page) இருப்பதுதான் பயோடேட்டா (Bio-Data).




    நமது திறமை என்ன தகுதி என்ன?  என்பன போன்றவை தெள்ளத்தெளிவாக நாம் விண்ணணப்பிக்கும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியவையும் இந்த பயோ-டேட்டாஅல்லது  Resume கள்பயோ டேட்டாவின் முக்கியத்துவம் வேலை தேடுபவர்களுக்குநன்றாகவே தெரியும்நல்ல பயோடேட்டாவை[ச் சார்ந்தே நல்ல வேலை கிடைக்கும் . பக்காவாக , பளிச்சென பயோ டேட்டா இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.




     ஒரு நல்ல பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி?  என்பது தான் பலருக்கும் தெரியாத விஷயம்இந்த குழப்பம் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.




     இப்படித்தான்பயோடேட்டா இருக்க வேண்டும் என்ற விதிகள் இல்லை. என்றாலும் ஒரு சிலர் பயோடேட்டா விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை தவறாக புரிந்து கொண்டு அதிக பக்கங்களில் பயோடேட்டாவை தயார் செய்கிறார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பலனை தராது. . கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத விஷயங்களை அதில் சேர்க்கக்கூடாது.




     அதேபோல பொய்யான தகவல்கள், கவர்ச்சிகரமான அம்சங்கள் இவைகளை தவிர்த்தல் நலம்இதனால் வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவன அதிகாரிகள் எரிச்சலடையாமல் இருப்பார்கள்.




சரிஇப்படிப்பட்ட  Bio-dataவை எப்படி தயாரிப்பது? இதற்காகவே உள்ளது இத்தளம்.






     செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள இந்த தளம் உதவும். இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பயோடேட்டாவை சுலபமாக, எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும்.




     ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் குழப்பமே உங்களுக்குத் தேவையில்லை.   இத்தளமே அதை கையாண்டுகொள்கிறது.




    கல்வி தகுதி (Educational Qualification),  வேலை தேடுபவரின் நோக்கம் (Aim of Job Seeker), பணி அனுபவம் (Experience)  போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.




     பயோடேட்டாவை உருவாக்குவதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.  இதற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் கீழே இருப்பதைப் போன்று துறைவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.







  • Teacher Resume Samples
  • Nurse Resume Samples
  • Resume Samples for Manager
  • Retail Resume Samples
  • Accounting Resume Samples
  • Engineering Resume Samples
  • Military Resume Samples
  • IT Resume Samples



     உருவாக்கப்படும்  Resume  ஒரு பக்கம் அளவே இருந்தாலும் எளிமையாக, வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் அதிலேயே வந்து விடுகின்ற‌னஇந்த தளம் உங்கள் பயோடேட்டாவை சிறப்பாக உருவாக்கி த‌ருபவை. அதை சரியாக நிறைவேற்றுகின்றன.





      இந்த தளத்தின் மூலம் பக்காவான பயோடேட்டாவை சுலபமாக உருவாக்கி கொண்டு விடலாம்

        நீங்கள் இத்தளத்தின் மூலம் உருவாக்கிய பயோடேட்டாவை  Printசெய்துகொள்ளலாம்PDF  கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்வேலைக்குஇணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

   



      அதே சமயம் உங்கள் ப‌யோடேட்டாக்கள் வேலை தரும் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன என்பன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை பெறுவதற்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்குகிறது.  நமது தகுதிக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இத்தளத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு.




        உங்கள் பயோ டேட்டாவை உருவாக்க நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://www.resumebaking.com/




குறிப்பு


       இத்தளத்தில் சென்று உங்கள் -மெயில் , மற்றும் உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்ட் கொடுத்து உங்களுக்காக கணக்கொன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். பிறகு தோன்றும் விண்டோவில் கேட்கும் விவரங்களை கொடுத்து தொடருங்கள். இது இலவச சேவையில்லை. குறைந்த பட்ச கட்டணத்தை வசூலித்துக்கொண்டு சேவையை தருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.



இதிலிருக்கும்  Resume tips கள் அனைத்தையும் படிக்க  இந்த இணைப்பில்  செல்லவும்.


0 comments:

Post a Comment

காப்பகம்