Tuesday, January 21, 2014

தனுஷ் - கஸ்தூரிராஜா மோதல்..!



கஸ்தூரிராஜா தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாரித்து டைரக்ஷன் செய்து வரும் படம் காசு பணம் துட்டு. இதில் நடித்திருக்கும் நடிகர்கள், பாடியிருக்கும் பாடகர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதன் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை அண்ணாமலை செட்டியார் மன்றத்தில் நடந்தது. கஸ்தூரி ராஜாவின் மனைவி விஜயலட்சுமி, மகன் தனுஷ், மருமகள் ஐஸ்வர்யா, இன்னொரு மகன் செல்வராகவன், மகள், மருமகன் ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இயக்குனர்கள் சரவணன், பொன்ராம், துரை.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

படத்தின் பாடலுக்கு அதில் நடித்தவர்களே ஆட்டம்போட்டனர். கஸ்தூரிராஜாவும் ஒரு பாட்டுப் பாடினார். பின்னர் படத்தின் ஆடியோ சிடி வெளியிடப்பட்டது. பின்னர் தனுஷ் பேசினார். அப்பா நடத்தின் ஆடியோ பங்ஷன்ல முதல் தடவையாக கலந்துக்குறேன். நான் நடிகனாகித்தான் கலந்துக்கணும்னு இருந்திருக்கு. சின்ன வயசுல அவருக்கு பயந்து நாங்க நின்னுக்கிட்டு இருந்த மாதிரியே இன்னிக்கு அவரு பயந்து நின்னுக்கிட்டு இருந்ததை பார்க்க சந்தோஷமா இருந்திச்சு. இந்த படத்துல ஒரு பாட்டு பாடச் சொன்னார். நேரம் இல்லாததால நான் பாடலை. போடா நான் வேற ஆளவச்சி பண்ணிக்கிறேன்னு பண்ணிட்டார். அவருக்காக இந்த மேடையில பாடுறேன் (சில வரிகளை பாடினார்). அவருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அடுத்த படத்துலையாவது தமிழ் பாடகர்களுக்கு சான்ஸ் கொடுங்க என்றார்.

உடனே மேடைக்கு வந்த கஸ்தூரி ராஜா "தமிழ் தெரியாதவங்கள தமிழ்ல பாட வைக்கிறது தான் சாதனை. இவ்வளவு சொல்ற, நீ மட்டும் இந்தி பேசி நடிக்கலாமா?" என்று திருப்பிக் கேட்டார்.

மீண்டும் மைக் பிடித்த தனுஷ் "அப்பா பேசும்போது நான் ஒரு புனித நூலை எடுத்துக்கிட்டு வந்தேன். குடும்ப சுமையால அதை படிக்க முடியல. இப்போ குடும்ப சுமைய இறக்கி வச்சிட்டேன் அந்த புனித நூலை காணல. அதை தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு. அந்த புனித நூலை நானும் அண்ணனும் எடுத்துக்கிட்டு போய் பெரிய ஆளாயிட்டோம். நீங்க பேசாம அம்மாவை கூட்டிக்கிட்டு வெளிநாட்டுக்கு போங்க" என்றார்.

"உங்க அம்மாவ கன்வீன்ஸ் பண்ணிட்டி டிக்கெட் போடு நான் போறேன்" என்றார் கஸ்தூரிராஜா.

0 comments:

Post a Comment

காப்பகம்