Friday, January 17, 2014

செல்போனில் புயல் அறிகுறி:வி.ஐ.டி.மாணவர்களின் லேட்டஸ்ட் சாதனை!



புயல் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு பதிலாக புயல் ஏற்படுவதற்கான அறிகுறிகளை உடனடியாக அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளில் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் விவேக் வித்யாசாகரன் மற்றும் சந்தீப் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டனர்.

வி.ஐ.டி. இயந்திரவியல் மற்றும் கட்டிட அறிவியல் பள்ளி பேராசிரியர் சத்யஜித் கோஷ் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அவர்கள் செல்போன் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 929 மில்லியனிலிருந்து 2014–ம் ஆண்டில் 1.15 பில்லியன் அளவிற்கு உயரும் வாய்ப்பு உள்ளது.

செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலமாக புயல் போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகும் வகையில் அதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

செயற்கைகோள் தொழில்நுட்ப வசதியின் மூலம் புயல் அறிகுறிகளை வானிலை ஆராய்ச்சி மையத்தினர் பெற்று அதனை தொலைகாட்சி மற்றும் வானொலி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வழியாக மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு பதிலாக செல்போன் மற்றும் இண்டர்நெட் வாடிக்கையாளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான புதிய தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்தனர்.

ஆராய்ச்சி பற்றிய முழு அறிக்கையை அம்மாணவர்கள் இங்கிலாந்தில் உள்ள ராயல் மெட்ராலாஜிக்கல் சொசைட்டியில் சமர்ப்பித்தனர். அதனை ஆய்வு செய்த ராயல் மெட்ராலஜிக்கல் சொசைட்டி அதனை ஏற்றுக்கொண்டு வானிலை அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர்.வி.ஐ.டி. மாணவர்கள் விவேக் வித்யா சாகரன், சந்தீப் சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள இந்த ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புயல் பற்றிய அறிகுறிகளையும், அதன் வேகம், பலம் மற்றும் அமைப்பு பற்றிய தகவல்களை செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment

காப்பகம்