Friday, January 17, 2014

இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை..!



1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும்.

ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது.

மக்கள் திலகம் புரிந்த புரட்சிகள்

கலைத்துறையில் பல புதுமைகளை உண்டாக்கினார். அரசியலில் பல புரட்சிகளை செய்தார் படைத்தார். அரசாங்கத்தில் நேர்மையான நல்லாட்சியை நடத்தினார். மக்கள் குறைகளை அறிந்து மாவட்டம்தோறும் திட்டம் போட்டார். வறுமையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஏழை மக்களுக்கு உடனே, என்ன செய்யவேண்டும் என்பதை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகள் நடத்தினார். பழஞ்சோறும் கூட பார்த்து அறியா பாலகர்களுக்கெல்லாம் தினம் தோறும் ஒரு வேலை மதிய சத்துணவு கொடுக்க உத்தரவு இட்டார். ஏழை மக்களுக்கு வேண்டிய உணவு பொருட்கள் மீது அக்கறை காட்டினார்.

தான் ஒரு நாட்டின் "முதல்மந்திரி" என்ற தற்பெருமை இல்லாமல் ஆட்சி நடத்தினார். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பார். அவர்களிடம் நாம் மக்களுடைய சேவகர்கள் என்று அடிக்கடி சொல்வார் மற்ற மந்திரிகளிடமும், 1960ல் சினிமாவில் பிரபலமான மக்கள் திலகம் அவர்கள் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கைவண்டி இழுத்து செல்லும் தொழிலாளிகளுக்கு செருப்புகள் வாங்கி கொடுத்தார்.

இது சென்னை நகரம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் உள்ள கைவண்டி தொழிலாளர்களுக்கும் காலில் செருப்பு இல்லாதவர்களுக்கும் செருப்பு வாங்கி கொடுக்கனும் என்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாக தன்னுடைய சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார். இதே போல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கும் மழை பெய்யும் காலங்களில் அவர்களுக்கு மழை கோட்டு வாங்கி கொடுத்தார்.

அந்த காலத்தில் மனிதனை வண்டியல் உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்வார்கள். அதற்கு கைரிக்ஷா என்று பெயர். இப்படி மனிதன் மனிதனை உட்கார வைத்து இழுத்து செல்லக்கூடாது இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் இவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுக்கனும் என்று அப்போது, உள்ள அரசாங்கத்தாரிடம் கேட்டு கொண்டார். அதன்பிறகு அந்த கைரிக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்படி இதுமாதிரியான எவ்வளவோ விசயங்கள் உண்டு. இவைகள் எல்லாம் அரசியல் ரீதியாக எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருந்தாலும் இது அவருடைய வரலாற்றில் வரவேண்டிய விசயங்கள்

0 comments:

Post a Comment

காப்பகம்