Friday, January 17, 2014

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா?



மேக்-அப் பிரைமர் என்பது மேக்-அப் செய்வதற்கு முன் போடக்கூடியது. பொதுவாக இதனை மேக்-அப் வெகுநேரம் முகத்தில் தங்குவதற்காக போடுவார்கள். இது தற்பொழுது மிகவும் பரவலாக காணப்படுகின்றது.

 மேக்-அப் போடும் முன் இதை தடவுவதால், முகத்தின் தன்மை மேக்-அப்பிற்கு ஏற்றார் போல் மாறி, மேக்-அப் போட வசதியாக இருக்கும். இதன் மூலம் மேப்-அப் போட்டிருந்தாலும் இயற்கையான சருமத்தை போன்ற அமைப்பை பெற முடியும்.

 இதனால் முகத்திற்கு போடும் மேக்-அப் வெகு நேரத்திற்கு கலையாமல் இருப்பதுடன், மிகவும் அழகாகவும் காட்டும். மேலும் இந்த மேக்-அப் பிரைமர் போட்டால், முகத்தில் அதிக மேக்-அப் வழிவதை கட்டுப்படுத்தும். குறிப்பாக இதனை மேக்-அப் வெகுநேரம் தங்காத இடத்தில் தடவ வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தாடை, கண் இமைகள், உதடு மற்றும் முகத்தை சுற்றி இதை போட வேண்டும். எந்த வகையான மேக்-அப்பாக இருந்தாலும், போடும் முன்னர் முகம் சுத்தமாக இருப்பது அவசியம்.

மேக்-அப் பிரைமரை எப்படி போடுவதென்று தெரியுமா?

 * முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதிலும் சோப் அல்லாத ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

* பின் மென்மையான மற்றும் சுத்தமான துணியை வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.

 * அடுத்து ஈரப்பதம் தரும் க்ரீமை தடவி, சருமத்தில் அது காயும் வரை விட வேண்டும்.

 * காய்ந்தவுடன் பிரைமரை தடவ வேண்டும். அதிலும் முகத்தில் மேக்-அப் அதிக நேரம் தங்காத இடத்தில் கவனமாக பூச வேண்டும். கண் இமை, உதடு மற்றும் தாடை போன்ற இடங்களில் அதிக கவனம் கொண்டு பூசவும்.

* பிறகு முகம் முழுவதும் பூச வேண்டும். பிரைமரானது நன்கு முகத்தில் காய்ந்தவுடன், ஃபௌண்டேஷன் க்ரீம் (foundation cream) பூச வேண்டும். பிறகு பாருங்கள் நீங்கள் தேவதை தான்.

0 comments:

Post a Comment

காப்பகம்