Sunday, August 24, 2014

குளிர்காலத்தில் பக்கவாதம், மாரடைப்புக்கு வாய்ப்பு அதிகம் - எச்சரிக்கை...!

சாதாரண நேரங்களைக் காட்டிலும் குளிர் காலங்களில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பத்துடன் கூடிய தட்பவெப்ப நிலையே அதிக காலங்கள் நீடிக்கிறது.

ஆனால், குளிர்காலம் வரும்போது  இந்தியர்களின் உடல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாறும்போது நோய்கள் பாதிக்கும் அபாயங்கள் இருந்து வருகின்றன. ஆனால், இதற்கான  காரணிகள் குறித்து ஏராளமானவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை.

பொதுவாக குளிர்காலங்களில் மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் குளுமை காரணமாக சுருங்கிவிடும். இதனால் இதயம் அதிக செயல்பட  வேண்டிய கட்டாயத் திற்கு தள்ளப்படும்.

குளிர்காலத்தில் காற்றில் உள்ள பிராண வாயுவின் அளவு, குறைந்து காணப்படும். இதனால் ரத்தத்தில் உள்ள  சிவப்பணுக்கள், தட்டை அணுக்கள் மற்றும் பைபர்நோஜன் மூலக்கூறு ஆகியவை அதிகரிக்கும். இதனால் மற்ற காலங்களைக் காட்டிலும்  குளிர்காலத்தில் மனித உடலில் உள்ள கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது.

இதனால் வழக்கத்திற்கு மாறாக ரத்தம் உறையத்தொடங்கி, மூளை மற்றும்  இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

ரத்தக்குழாயும் சுருங்கி, ரத்த ஓட்டமும் குறைவதன் விளைவாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்தியாவில்  மலைப்பிரதேசங் களில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மற்ற பிரதேசங்களில் வசிப்பவர்களை காட்டிலும் 50 சதவீதம் அதிகம் உள்ளது.

இதை எப்படி நாம் தெரிந்துகொள்வது என்ற சந்தேகம் எழலாம். குளிர்காலத்தில் மார்பில் அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், அதுதான்  ரத்த ஓட்டம் குறைந்ததற்கான முதல் அறிகுறி.

குளிர்காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பதால், இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்தக்கொதிப்பு ஏற்படும். இது போன்ற பாதிப்பு வயதானவர்களுக்கு  அதிகம் ஏற்படும்.

மேலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மனித உடலில் உள்ள வெப்பம் 80  பாரன்ஹீட்டுக்கு குறையும்போது விளைவுகள் விபரீதமாக இருக்கும். உடல் நடுக்கம் தொடங்கி, மயக்கநிலை, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை  ஏற்படும்.

0 comments:

Post a Comment

காப்பகம்