Friday, August 8, 2014

இரண்டாவது குழந்தையின் வருகைக்கு தயாராவதற்கான டிப்ஸ்…!

குழந்தைச் செல்வம் தான் சிறந்த செல்வமாகும். ஒரு வீட்டின் அழகு அந்த வீட்டில் இருக்கும் மழலைச்செல்வங்களை பொருத்தே இருக்கும். குழந்தை இல்லாத வீடு வெறும் நான்கு சுவர்களால் செய்த அறைதான். வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மழலைப்பேச்சும் குறும்புகளும் நம்மை பெரிதும் மகிழ்ச்சியடைய செய்யும்.

நமது குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை என்றாலே மகிழ்ச்சிதான். நீங்கள் இன்னும் உங்கள் முதல் குழந்தையின் வரவு அளித்த மகிழ்ச்சியில் இருந்து மீண்டுவரவில்லை என்றாலும் இரண்டாவது முறையாக கருவுற்றிருப்பது அறிந்தால் அது இன்னும் கூடுதல் சந்தோஷத்தை அளிக்கும். ஆம்! நீங்கள் ஏற்கனவே இந்த பாதையை கடந்து வந்ததால் கருவுறுவது உங்களுக்கு முதல்முறை இல்லை. எனினும், உங்கள் இரண்டாவது குழந்தையின் வருகையால் உங்களுக்கு சில கூடுதல் பொறுப்புகள் இருக்கின்றது.

ஒரு குழந்தையின் வருகைக்கு சில விரும்பத்தக்க முன்னேற்பாடுகளையும் தேர்வுகளையும் செய்வதற்கான தருணம் இதுதான். உங்கள் வீட்டில் எல்லாமே மாறுபடக்கூடிய தருணமும் இதுதான். உங்கள் முதல் குழந்தை தனது தங்கையைப் பற்றியோ, தம்பியைப் பற்றியோ கேட்கத் தொடங்குவாள். வீட்டில் இரண்டு குழந்தைகளை சமாளிப்பது மிகக்கடினமான வேலையாகத் தான் இருக்கும். எனினும், இரண்டாவது குழந்தை வரவிருக்கும் சமயத்தில் நாம் நல்லதையே நினைக்க வேண்டும்.

இரண்டாம் முறை கருவுற்றிருப்பது உங்களை சீக்கிரமே தளர்வடையச் செய்யும். ஏன்னெனில், நீங்கள் இந்த சமயத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்க நேரிடும். ஒன்று உங்கள் உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுவது இரண்டாவது உங்கள் முதல் குழந்தை கவனித்து கொள்ளுவது. உங்கள் முதல் குழந்தையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். பிரசவம் முடிந்த 6 முதல் 8 வாரங்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும். ஏன்னெனில், அச்சமயம் உங்கள் கைக் குழந்தையையும் கவனிக்க வேண்டி இருக்கும். ஆகவே இரண்டாம் முறை கருவுற்றிருக்கும் வேளையில், பெற்றோர்களுக்கான சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம்.

மறுமுறை உபயோகித்தல்:-உங்கள் முதல் குழந்தையின் சில பொருட்களை குறிப்பாக அவர்களின் துணிமணிகள் போன்றவற்றை தனியாக எடுத்துவைத்து மறுமுறை உபயோகிக்கலாம். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி வெளியில் எடுத்து செல்லும்போது அவர்களுக்குரிய ஆடைகளை அணிவிக்கலாம். வீட்டில் இருக்கும் போது ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் முதல் குழந்தையின் ஆடைகளை அணிவிக்கலாம். இதேபோல், உங்கள் முதல் குழந்தையின் உபயோகப்படுத்தாத பாட்டில்கள் மற்றும் மற்ற பொருட்களையும் இந்த சமயத்தில் உபயோகிக்கலாம். இதுபோன்ற சிலவற்றை நீங்கள் இரண்டாம் குழந்தை கருவுற்றிருக்கும் போது செய்யலாம்.

சிறந்த சலுகைகள்:-உங்கள் கைக்குழந்தைக்கு தேவைப்படும் டயபர்களின் சிறந்த சலுகைகளை கவனித்து வர வேண்டும். உங்கள் கைகுழந்தைக்கான சைஸ் 1 டயபர்களை வாங்கி வைத்து குழந்தை பிறந்த பிறகு உபயோகப்படுத்தலாம். உங்கள் இரண்டாம் குழந்தை வருகைக்கு முன் செய்யும் முன்னேற்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

சீக்கிரம் தயாராகும் உணவுகள்:-இரண்டாவது முறை கருவுற்றிருக்கும் சமயத்தில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் வீட்டில் சில பதபடுத்தப்பட்ட உணவுவகைகள், உறைந்த மற்றும் உலர்ந்த உணவுவகைகளை வாங்கி வையுங்கள். இதனால் இரண்டாவது குழந்தையின் வருகைக்கு பிறகு இவை உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட உதவும். இது எல்லா பெற்றோர்களும் பின்பற்ற வேண்டிய குழந்தை வளர்ப்பு டிப்ஸ்களில் ஒன்றாகும்.

பொம்மைகள் வைக்கும் பெட்டிகள்:-உங்கள் படுக்கை அறையில் பொம்மைகள் வைக்கும் பெட்டிகளை தயாராக வைத்திருங்கள். இது நீங்கள் உங்கள் கைக்குழந்தைக்கு பால் புகட்டும்போது உங்கள் முதல் குழந்தை விளையாடுவதற்கு உதவியாக இருக்கும். இரண்டாவது குழந்தையின் வருகையின்பொது பெற்றோர்கள் பின்பற்றவேண்டிய குழந்தைவளர்ப்பு டிப்ஸ்கள் சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால், தேவையான முன்னேற்பாடுகளை செய்து வைத்தல் நமது வேலை சுலபமாகிவிடும்.

சுத்தமாக வைக்க வேண்டும்:-உங்கள் குழந்தையின் வருகைக்கு முன் உங்கள் குழந்தையின் அறையை சுத்தப்படுத்துவது கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இது உங்கள் குழந்தையை கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களிடம் இருந்து பாதுகாக்க உதவும். இது நீங்கள் இரண்டாவது குழந்தையின் வருகைக்கு முன் உடனே மற்றும் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்றாகும்.

உறவினர்களை வீட்டிற்கு அழைத்தல்:-உங்கள் குடும்பத்தினர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களின் உதவியை பெறுங்கள். உங்கள் கருவுற்றிருக்கும் காலம் மற்றும் பிரசவ நேரங்களில் அவர்கள் உங்களுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இது உங்கள் முதல் குழந்தையை சமாளிப்பதற்கும் உங்களை பார்த்துக்கொள்ளவும் எளிமையாக இருக்கும்.

முதல் குழந்தையை தயார்படுத்துவது:-இது பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய குழந்தைவளர்ப்பு டிப்ஸ்களில் ஒன்றாகும். உங்கள் முதல் குழந்தையின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவளிடம் தனது தங்கை/தம்பி யின் வரவைப்பற்றி கூறி தயார்படுத்த வேண்டும். அதனை நினைத்து சந்தோஷப்பட வைக்க வேண்டும். அவளது தங்கை/தம்பி யோ அவளுக்கு சிறந்த நண்பனாக இருப்பான் என்று கூறுங்கள்.

0 comments:

Post a Comment

காப்பகம்