Wednesday, January 15, 2014

சீரியல் பார்க்கும் பெண்களெ...உஷார்...! பி.பி. எகிறும்...!

சீரியல் பார்க்கும் பெண்களெ...உஷார்...! பி.பி. எகிறும்...!


தொலைக்காட்சியில் தொடர்ந்து சீரியல் பார்க்கும் குடும்பப் பெண்களுக்குத்தான் பிபி எனும் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம். அவர்களுக்கு என்ன மருந்து கொடுத்தும், உடற்பயிற்சி மற்றும் வாக்கிங் போகச் சொல்லிக் கொடுத்தும் பி.பியின் அளவு குறையவே இல்லையாம்.
 
பரிசோதனை செய்தவர்களில் 25 பேரை, ஒரு வாரத்திற்கு டி.வி. சீரியல்களைப் பார்க்காவிடாமல் செய்ததில், பி.பி. நார்மலுக்கே வந்து விட்டதாம்.
சீரியல் பார்ப்பதால் ஒரு வகையான மன அழுத்தத்திற்கும் மன இறுக்கத்திற்கும் ஆட்படுவதே அவர்களின் ரத்த அழுத்த உயர்வுக்குக் காரணம் என்கிறார்கள். பி.பி. தொடர்பாக சென்னை பொது மருத்துவர் கே.ப்ரித்தி ராஜேஷிடம் கேட்ட கேள்விகள் இவை.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

இதயம் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை பம்ப் செய்துதான் மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அப்போது இதயம் சுருங்கி விரிவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். இதயத் தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதலாக இருக்கும். அதுதான் 120 சிஸ்டோலிக் அளவு. இதயம் விரியும் போது அழுத்தம் குறைவாக இருக்கும். அதுதான் 80 டைபாஸ்டோலிக் அளவு. அதாவது ஒரு மனிதனுக்கு 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச அளவு இருந்தால் அவர் நார்மல்.

சரி, உயர் ரத்த அழுத்தம் என்பது எது?

120/80 என்ற நிலையைத் தாண்டி 139/89 வரை கூட போகலாம். அதை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய நிலை என்பர். இந்த எல்லையையும் தாண்டி, அதாவது 140/90 தாண்டிவிட்டால் அதுதான் உயர் ரத்த அழுத்தம் இதனை உடனே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாக வேண்டும்.
இல்லாவிட்டால், ஹார்ட் அட்டாக், கிட்னி ஃபெயிலியர், சர்க்கரை நோய், கண், மூளை பாதிப்பு என்று சகல நோய்க்கும் வழிவகுத்துவிடும்.

பி.பி.யைக் கட்டுப்படுத்த என்னவழி?

1. உப்பு குறைப்பு: உப்பு தான் பி.பி.யின முதல் எதிரி. உப்பு அதிகம் உள்ள எந்தப் பொருளையும் தொடக்கூடாது.

2. இடுப்பின் அளவு: இடுப்பின் சுற்றளவை அடிக்கடி அளவிட வேண்டும். அளவுக்கு அதிகமான எடையை, சதையை இடுப்பில் வைத்திருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுருக்கமாக தொப்பை போடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

3. உடல் எடை: தொப்பை மட்டுமல்ல, உடல் எடை கூடினாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பி.பி. உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் அளவுக்கு மீறி உடல்எடை உள்ளவர்கள். அதனால் உடல் எடையில் கவனம் வேண்டும்.

4. மனஅழுத்தம்: கவலை, பதற்றம், பயம், மன அழுத்தம், மன இறுக்ம் இருந்தால் கண்டிப்பாக பி.பி. எகிறும். யோகா, தியானம், மூச்சு உள்வாங்கி வெளியிடுதல் போன்ற பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கப் பார்க்க வேண்டும்.

5. புகை, பிடித்தல் கூடாது: புகை பிடிப்பது பி.பி.யின் இன்னொரு பெரிய எதிரி. ஒரு சிகரெட் புகைத்தாலே 10 மி.மீ. வரை ரத்த அழுத்தம் உயரும்.

6. மது: மதுவால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு பெக் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் கணிசமான அளவு குறைகிறது என்கிறார்கள். ஆனால் அதுவே அளவை மீறினால் உயிருக்கே ஆபத்துதான்.

சரி, பி.பி. உள்ளவர்கள் காபி சாப்பிடலாமா?

பி.பி. இருந்து காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றுபவர்கள், காபி சாப்பிடுவதற்கு முன்பும், காபி சாப்பிட்ட பின்பும் பி.பி.யை செக் பண்ணுங்கள். 5-10 மி.லி. அதிகரித்தால் காபியை தவிர்த்து விட வேண்டும். மற்றவர்கள் காபி சாப்பிடலாம்.

பி.பி. உள்ளவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடலுறவு கொள்வதால் மன உளைச்சல் குறையும். அதனால் பி.பி.யுன் அளவும் குறைய வாய்ப்பு உண்டு. இதனால் புத்துணர்வு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
ஆனால், மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் ரத்த அழுத்தம் மேலும் உயர்ந்து, மூளையிலுள்ள நுண்ணிய ரத்த நாளங்கள் வெடித்து ரத்த கசிவு ஏற்படும் நிலை உருவாகலாம்.

டின்னில் விற்கும் குளிர் பானங்கள் பி.பி.யை உயர்த்துமா?
குளிர் பானங்கள் மட்டுமல்ல, டின்னில் அடைத்து விற்கும் உணவுப் பொருள்கள், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் ஆகியவற்றில் ருசிக்காக அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் கொழுப்புப் பொருட்களும் ஒரு வகையான வினோதமான உப்பினாலும்தான் 60 சதவிதம் மக்களுக்கு பி.பி.யே எகிறுகிறது. கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவுகளும் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களும் தான் பி.பி.யை கட்டுப்படுத்தும். பூண்டு நல்லது.

ஏன் அடிக்கடி பி.பி. செக்கப் செய்ய வேண்டும்?
என்னென்ன செய்ததால் பி.பி. கூடியுள்ளது. எதை தவிர்த்தால் பி.பி. குறைந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு அதன்படி நடக்க, நாம் அடிக்கடி பி.பி. செக்கப் செய்வது நல்லது. பி.பி. குறையாமல் இருந்தால் அது வேறு ஒரு பிரச்னை உள்ளது என அர்த்தம். அதை உடனே மருத்துவரிடம் சென்று தீர்க்க அடிக்கடி செக்கப் அவசியம்.

நடைப்பயிற்சி

குறைந்தது 45 நிமிடங்கள் தொடர்ந்து சீராக மிதமா வேகத்தில் நடப்பவர்களுக்கு பி.பி.யே வராது. நடக்க முடியாதவர்கள் 30 நிமிடங்களில் உரிய உடற்பயிற்சி செய்தாக வேண்டும். மாத்திரைகளால் கட்டுப்படுவது என்பது தற்காலிகமானதே.

0 comments:

Post a Comment

காப்பகம்