Thursday, January 16, 2014

ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர்....



ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய சிங்கள வீரர் ராஜபக்சே கட்சியில் சேர்ந்தார். 1987–ம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். அதன் பிறகு ராஜீவ்காந்திக்கு சிங்கள ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படடது.

அப்போது 22 வயது சிங்கள வீரர் திடீர் என்று துப்பாக்கியை திருப்பி பிடித்து ராஜீவ்காந்தி தோள் பட்டையில் அடித்தார். இது 1987–ம் ஆண்டு ஜூலை 30–ந்தேதி நடந்தது. ராஜீவ் காந்தியை தாக்கிய சிங்கள வீரர் விஜித் ரோகன விஜய முனி கைது செய்யப்பட்டு ராணுவ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் மீது ஒரு நாட்டின் அதிபரை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. விஜய முனிக்காக வாதாடிய வக்கீல் கூறுகையில், ‘‘அவர் கொலை முயற்சியில் ஈடு படவில்லை. அந்த எண்ணம் இருந்திருந்தால் துப்பாக்கியில் இருந்த கத்தியால் குத்தி இருக்கலாம்’’ என்றார்.

இதையடுத்து அவருக்கு சில வருடங்கள் மட்டுமே ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜீவை தாக்கியதால் அவர் சிங்களர்கள் மத்தியில் ஹீரோவாக புகழப்பட்டார். ஜெயிலில் கூட ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்தார். உலகை ஏமாற்றும் விதமாக இலங்கை அரசு கண்துடைப்பு நாடக மாடியது.

ஜெயிலில் இருந்து விடுதலையான விஜயமுனி பட்டப்படிப்பை முடித்து சுயதொழில் ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டார். சிங்கள உரிமைய கட்சியில் இணைந்து 2000–ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.

தற்போது இவர் ஆளும் ராஜபக்சேவின் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார். 1987–ல் சந்தேகத்தின் பேரில் கைதான தமிழ் அரசியல் கைதிகள் பலர் இன்னும் ஜெயிலில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் பிரதமரை அடித்த விஜயமுனி சுதந்திரமாக வெளியே வந்தது தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

காப்பகம்