ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெக்ஸ்ட்மிரர் இணையதளம் அவ்வாறு அந்த தளத்தை மாற்றி தருகிறது.
எந்த இணையதளத்தை மாற்ற வேன்டுமோ அதை இந்த தளத்தில் சமர்பித்தால், அதில் உள்ள இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நீக்கிவிட்டு வெறுமையாக தருகிறது.அப்போது வெறும் வரி வடிவிலான தகவல்கள் மட்டுமே இருக்கும்.மற்றபடி, புகைப்படங்களோ,விளம்பரங்களோ வேறு எந்த அம்சமும் இருக்காது.
எதோ கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுதப்பட்டது போல அந்த பக்கம் காட்சி அளிக்கும்.சரி, இப்படி இணையதளங்களை அவற்றின் வடிவமைப்பு மற்றும் எச்டிஎமெல் சார்ந்த அம்சங்களை நீக்கி விட்டு வெறும் எலும்புக்கூடு போல பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன?
பல பிரவுசர்களில் வரி வடிவில் மட்டும் சேமிப்பதற்கான வசதி இருக்கிறதே என்று கேட்கலாம். உண்மைதான் பிரவுசர்கள் மூலமே ஒரு தளத்தின் வரி வடிவத்தை மட்டும் சேமிக்கலாம் தான்,ஆனால் டெக்ஸ்ட்மிரர் பயன்படுத்தும் போது தளத்தின் மூல வடிவமைப்பு அப்படியே பாதிக்காமல் இருக்கிறது.அதாவது இடது புறம் இருந்த தகவல்கள் அங்கேயே மாறாமல் இருக்கும் . இது ஒரு அணுகூலம்.
மற்றபடி அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பேஸ்புக் போன்ற பக்கங்களை இப்படி வடி வடிவில் பார்க்கலாம்.
வரி வடிவம் என்பதால் குறிப்பிட்ட இணையதளம் துரிதமாக வந்து நிற்க வாய்ப்புள்ளது.
எது எப்படியோ, இணைய கட்டுரைகளை விளம்ப தொல்லை இல்லாமல் படிக்க விடும்பினால் அதற்கு இன்ஸ்டபேப்பர் போன்ற அருமையான தளங்கள் இருக்கின்றன.
இணையதள முகவரி; http://textmirror.net/
0 comments:
Post a Comment