Pages - Menu

Pages

Tuesday, August 19, 2014

விநாயகர் சதுர்த்தியன்று அஜித்தின் 55வது பட டைட்டில்

இயக்குநர் கௌதம் மேனன் தற்போது அஜித்தின் 55வது படத்தை இயக்கிவருகிறார் என்று நமக்கு தெரியும்.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடிக்கின்றனர். கௌதம் மேனன், அஜித் முதன் முறையாக இணைந்துள்ள படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக டைட்டில் எதுவும் வைக்கவில்லை.


இது அஜித் ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவர்களை குஷிப்படுத்த ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அன்றைய தினமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

No comments:

Post a Comment