Pages - Menu

Pages

Tuesday, August 19, 2014

3 நாளில் ரூ.30 கோடி: அஞ்சான் வசூல் சாதனை

சூர்யா, சமந்தா ஜோடியாக நடித்த ‘அஞ்சான்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது.

இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது. இதுவரை எந்த தமிழ் படமோ மலையாள படமோ 3 நாளில் இவ்வளவு வசூல் ஈட்டியது இல்லை.


‘அஞ்சான்’ படம் ரிலீசான போது ரசிகர்கள், மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதுவே இவ்வளவு வசூல் ஈட்ட காரணம் என்கின்றனர்.

இது குறித்து டைரக்டர் லிங்குசாமி கூறும்போது ‘அஞ்சான்’ படம் 3 நாளில் ரூ.30 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த படத்தில் சூர்யாவின் ‘கெட்டப்’, அஞ்சான் தலைப்பு டிரெய்லர், பாடல்கள், சூர்யாவுக்கும் எனக்குமான கூட்டணி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் படம் ரிலீசாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. கதை கருவும், போஸ்டர்களும் படம் பார்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுவே இவ்வளவு பெரிய வசூல் சாதனைக்கு காரணம் ஆகும்.

No comments:

Post a Comment