Pages - Menu

Pages

Sunday, August 17, 2014

விஷால் படத்தில் மாஜி ஹீரோயின்கள்..!

நட்புக்காக நடிகர் நடிகைகளை நடிக்க வைப்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். என்றாலும், பார்த்திபன் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்திருக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், பரத், விமல், சாந்தனு, அமலாபால், டாப்சி என ஒரு நட்சத்திர பட்டாளமே நட்புக்காக நடித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் புதுமுகங்களை வைத்தே கம்பு சுற்ற போகிறேன் என்று களமிறங்கிய பார்த்திபனுக்கு கமர்சியல் பயம் ஏற்பட்டதையடுத்து, நட்புக்காக இந்த பட்டாளத்தை தனது கதைக்குள் களமிறக்கினார். இதுவே இப்போது அப்படத்திற்கு பெரிய விளம்பரமாகியிருக்கிறது.


இந்த நிலையில், அப்படத்தில்,. சுனாமியில் சிக்கிக்கொள்வது போன்று படமாக்கப்பட்ட முதல் காட்சியில் நடித்திருந்த விஷால் இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் ஆம்பள படத்திலும் பல பிரபலங்களை உள்ளே இழுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் நிலையில், பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அவரைத் தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன், சிம்ரன், நதியா, கிரண் உள்ளிட்ட சில மாஜி ஹீரோயின்களையும் முக்கிய வேடங்களில் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. ஆம்பள என்ற டைட்டீல் ஆக்சன் ஸ்டோரி போல் தெரிந்தாலும், சுந்தர்.சியின் பிராண்ட் காமெடி கலாட்டாவும் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம்.

No comments:

Post a Comment