Pages - Menu

Pages

Friday, January 10, 2014

விஜயகாந்த் மகனுடன் நடிக்கிறாரா விஜய்..?



கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். விஜயகாந்த் சண்முகபாண்டியனை அறிமுகம் செய்துவைத்த நிகழ்ச்சிக்கு, இயக்குனர்-தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் சென்று வாழ்த்தியிருந்தார்.

அந்த விழாவிலேயே ‘என் மகன்(விஜய்) ஒரு நல்ல பிரேக்குக்காக காத்திருந்த சமயத்தில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த், சம்பளமே வாங்காமல் நான் கேட்ட ஒரே காரணத்திற்காக கதையே கேட்காமல் நடித்துக்கொடுத்தார்” என்று பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார் எஸ்.ஏ.சி.

விஜய்க்காக விஜயகாந்த் செய்தது போல தற்போது விஜயகாந்த் மகன் சினிமாவில் அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்திலும் விஜய் நடித்தால் படத்திற்கு ஒரு நல்ல புரமோஷன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக பேசப்படுகிறது. தன் மகன் அறிமுகமாகும் திரைப்படத்தில் விஜயகாந்த் எப்படியும் ஒரு காட்சியில் நடிப்பார் என்று கோடம்பாக்கத்து குருவிகள் கூவிக்கொண்டிருந்த நிலையில், விஜய் நடிப்பதாக பேசப்பட்டது மேலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

No comments:

Post a Comment