Pages - Menu

Pages

Tuesday, January 14, 2014

ரசிகர்கள் கொடுத்த வெற்றி - விஜய் நெகிழ்ச்சி



 விஜய், மோகன்லால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படம் 10ம் தேதி ரிலீசானது. இப்படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

அப்போது விஜய் பேசியதாவது:பொதுவாக நான் படத்தின் வெற்றி சந்திப்புகளில் கலந்துகொள்வது இல்லை. என்றாலும், ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பதற்காக இதில் கலந்துகொண்டேன். என் நண்பர்கள் ‘ஜில்லா’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு சென்று, அங்கு எடுத்த வீடியோ காட்சிகளை எனக்கு காட்டினார்கள்.

 அதில் என் ரசிகர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தியேட்டர் வாசலில் போஸ்டர் ஒட்டுவது, பேனர் கட்டுவதை பார்த்து நெகிழ்ந்தேன்.

படத்துக்கான நல்ல ஓப்பனிங்கும், வெற்றியும் அவர்கள் கொடுத்தது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக சொன்னார்கள். அவர்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம்தான்.

அனைவருக்கும் என் நன்றி.‘வீரம்’ படமும் நன்றாக இருப்பதாகவும், நன்றாக ஓடுவதாகவும் சொன்னார்கள். அஜீத், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளருக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துகள்.இவ்வாறு விஜய் பேசினார். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குனர் ஆர்.டி.நேசன், நடிகர்கள் மஹத், சூரி, இசையமைப்பாளர் இமான் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment